உன் நினைவுகள்
என் இதயத்தின் சுவர்களில்
எழுதிய கவிதைகள் அல்ல
அவை அந்தச் சுவர்களையே
தாங்கிப் பிடிக்கும் அஸ்திவாரம்
தேடும் மனதை
ஏமாற்றியதில்லை
கண்ணெதிரே
வந்து விடுகின்றாய்
இதயம் தேடும் அமைதி
பாசத்தின் தொடுதலில்
புதிய உயிராக மலர்கிறது
என் கவிதைகளின்
தலைப்பு நீ
உன் கவிதைகளின்
வரிகள் நான்
உன்னைக் காணாத நொடிகளில்
நான் இருண்டு போன உலகத்தில்
இருப்பது போல் உணர்கிறேன்
சில கண்ணோட்டங்கள்
வாழ்நாளை மாற்றும்
அதுதான் காதல்
சோம்பல் முறிக்க
எழும் புத்துணர்ச்சியாய்
உன் நினைவு
தொற்றி கொள்ள
மனமும்
எங்கு ஒளிந்து
கொண்டாலும்
உன் நினைவிடமிருந்து
தப்பிக்க முடிவதேயில்லை
எச்சரிக்கையற்ற பார்வை
ஆசையின் முதல் பாதை
ஆள்தல் நீயென்றால்
வாழ்தலும் வரமே
காதல் ராஜ்ஜியத்தில்
💖 பக்கம் 346 / 478
📋 Copied