கண்கள் கூட
பேசாமல் இருந்தாலும்
அந்த மௌனத்தில்
ஆயிரம் வார்த்தைகள் உண்டு
உன் வெட்கம்
எனக்கும்
துணிவை தந்தது
உன்னை ரசிக்க...
மனதில் இடம் தந்தால்
நினைவுகள் வீடு கட்டிவிடும்
கணவனிடம் எதையும்
மறைக்காத மனைவிக்கும்
மனைவியை யாரிடமும்
விட்டு கொடுக்காத
கணவனுக்கும்
பிரிவு என்பது இல்லை
அருகில் இருக்கும்
அன்பு அழகானது
ஆனால் தொலைவில்
இருக்கும் அன்போ
அதை விட ஆழமானது
மனதுக்கும்
மறதியுண்டாம்
அதை தினமும்
பொய்யாக்குகிறது
உன் நினைவு...
நீ என் இதயத்தில்
இல்லை என்று நினைத்தேன்
ஆனால் உண்மையில்
என் இதயமே நீ தான்
உன்னை நினைத்து
என்னை மறப்பதுதான்
காதலென்றால் ஆயுள்
முழுதும் வாழ்வேன்
எனை மறந்து
இனிய காதலர் தின
வாழ்த்துக்கள் என் காதலே
கண்கள் கூட
பேச முடியாத நொடியில்
ஆசை எல்லைகளை கடந்த
வெப்பமாக உடலெங்கும் பரவுகிறது
மூச்சு நெருங்கும்
அந்த அமைதி
காதலின் ஆழமான சப்தம்
💖 பக்கம் 342 / 478
📋 Copied