உன் விழியில்
கற்று கொண்டதை
என் விழியால்
கடத்துகிறேன்
மீட்டு கொள்
விழிகளால் மீண்டும்
நான் கற்று கொள்ள
உன் விழி கவிதைகளை
கண்கள் சந்தித்த தருணம்
ஒரு கவிதைதான்
ஆனால் அது முடிவற்ற
நாவல் ஆனது நாளடைவில்
இரு கண்கள்
பேசாத வார்த்தைகளை
காதல் புரிந்துகொள்ளும்
தொட்டாலும் அறிய முடியாத
சில காதல்கள்
ஒரு பார்வையால் எரிகின்றன
எனது
ஆயுள்ரேகையில்
மறைந்திருப்பதென்னவோ
உனது அன்புமட்டுமே
மெல்லிய சுவாசத்தில் கூட
ஏக்கங்கள் உருக்கம் பெறும்
வெண்ணை திருடும்
கண்ணனாய்
மனதை
திருடி கொண்டாய்
இரவில் பேசும் மௌனம் தான்
காதலின் உண்மையான மொழி
இதயம் சில பெயர்களை
அழிக்காது ஏனெனில்
அவை அதில் பதிந்திருக்கின்றன
விரலின் மென்மை
தவழும் தோளில்
காதல் பூத்தெழும்
மெளனமே உணர்வு
💖 பக்கம் 341 / 478
📋 Copied