பேச நினைத்த
வார்த்தைகளும்
தூரமானது உன்னருகில்
சிறுகொஞ்சல் என்ற ஒன்று
இரவில் முழு காதல் வர்ணமாகும்
உறக்கத்தை துரத்தி
கனவுகளை
கோர்த்து கண்களும்
காத்திருக்கு
நீ வருவாயென
அரவணைப்பில் நான்
உலகத்தை மறந்தாலும்
உன் நேசத்தில் நான்
என்னை மறக்க மாட்டேன்
கண்ணில் பதிந்த
ஒவ்வொரு நிமிஷமும்
இதயம் ஒரு புதுக்காதலாக உருகுகிறது
காதல் வார்த்தைகளில்
அடங்காத மெளன மொழி ❤️
பாசம் சிலருடன்
மட்டும் பேசும்
சொற்கள் இல்லாமல்
உன்னுடன் இருக்கும் நேரம்
வாழ்க்கை சரியாக இருக்கிறது
என்று உணர வைக்கிறது
அலங்கோலம்
கூட அழகுதான்
நீ கலைத்து
விளையாடும்
போது (கூந்தல்)
நான் மறைந்த
பின்னும்
நம் நினைவில்
உன் கண்களும்
கரையுமென்றால்
என் காதலும்
சாகா வரம்
பெற்றதே
💖 பக்கம் 34 / 478
📋 Copied