தூரம் என்னும் வார்த்தை
காதலுக்குள் பொருளற்றது

நீ யாருக்காக
அழுது கொண்டு
இருக்கின்றாயோ அவர்கள்
தான் மற்றொருவருடன்
சந்தோசமாக இருக்கின்றார்கள்

இடைவெளி இருந்தாலும்
கையெழுத்தாக
அவள் குரல் இருக்கிறது

சண்டைகளால் காதல்
இன்னும் வலிமையானது

தொல்லைகள் செய்தே
கொள்ளையடிக்கிறாய்
மனதை அழகாய்

மனதிலும் தாகம்
ருசிப்பதா ரசிப்பதா
என்று உனையும்

உன் விழிகளெனை
நேசித்தால்
என் விரல்களும்
வாசிக்கும் காதலிசை

பாசம் தோன்றும் தருணம் எளிது
மறக்க முடியாதது அதன் நிழல்

புன்னகை ஒரு மின்சாரம்
இதயம் முழுதும் ஒளிரச் செய்கிறது

மெல்லிசையிலும்
மெ(இ)ன்னிசை
உன் நினைவு