ஏமாற்றம்
என்று தெரிந்தும்
மனம்
எதிர் பார்ப்போடு
காத்திருக்கு
உனை
நீ வருவாயென்றே
இரவின் அமைதியில்
உடலை விட மனமே
அதிகம் பதட்டமடைகிறது
உன் நினைவுகள்
தொற்றிக்கொள்ளும் போது
என் விழியிலும் பல கனவுகள்....
எங்கோ நீயிருந்தாலும்
எனை மறக்காமலிருக்கிறாய்
என்றுணர்கிறேன்
உன் மிஸ் யூ வில்
இடைவெளிவிட்டு
நாமிருந்தாலும்
இதயங்கள்
இணைந்தே
பயணிக்கின்றது
பார்வை ஒன்று தான்
இதயத்தில் கவிதை எழுத
வைக்கும் மை
உன் காதலில்
நான் காணும்
ஒவ்வொரு நிமிடமும்
என் இதயத்தின்
இசை அதிகரிக்கிறது
நினைப்பதில்லை
என்று வருந்தாதே
என் நாழிகை நகர்ந்து
கொண்டிருப்பது
நம் அழகிய
நினைவுகளில் தானன்பே
உன் காயத்துக்கு
மருந்து நான்
என் கண்ணீர்
துடைக்கும்
விரல்கள் நீ
நம்மை நேசிப்பவர்கள் நம்மை
விட்டு போக மாட்டார்கள்
என்று நினைப்பது நம்
பெரிய தவறு தான்
💖 பக்கம் 335 / 478
📋 Copied