பாசம் திசை தெரியாத பயணம்
ஆனால் முடிவில் அமைதி தான்
மணலில் பெயர் எழுதிய
எல்லோராலும் மணவறையில்
பெயர் எழுத முடிவது இல்லை
உடலைவிட
மனதைத் தீண்டும்
தொடுதல்தான்
உணர்வின் உச்சம்
கண்கள் பேசும் உணர்வுகள்
வார்த்தைகளால்
விளக்க முடியாத
காதலின் வர்ணங்கள்
என்
ஒவ்வொரு
நொடியின்
தொடக்க
புள்ளி நீ
சில நிமிடம்
ரசித்தாலும்
மனதை வண்ணமாக்கி
செல்லும் வானவில்லாய்
நீயும் வண்ணமாக்குகிறாய்
மனதை
அடிக்கடி தொட்டு
ரசிக்குது மனமும்
மல்லிகையை
உன் கரம்
சூட்டியதாலா
என்னவனே
எங்கோ மறைந்திருந்து
மாயங்கள் செய்கின்றாய்
குழம்பி தவிக்கின்றேன்
தெளிவற்ற நீரில்
பிம்பமாய்
எங்கே நீயென்று
உன் சிரிப்பில்
நான் கண்டது
என் வாழ்வின் விடை
இருளான
இதய அறையிலும்
ஒளி பரவியது
நீ குடியேறியதால்
💖 பக்கம் 336 / 478
📋 Copied