ஒன்றும் சொல்லாத கண்கள் கூட
வாழ்நாள் முழுதும் பேச வைக்கும்
ஒன்றும் சொல்லாத கண்கள் கூட
வாழ்நாள் முழுதும் பேச வைக்கும்
இதயத் துடிப்பும் கூட
நேரத்தை காணாமல் இருந்தது
அவள் அருகில்
இதயத்தின் இருளில்
மலரும் ஒரே ஒளி காதல் தான்
மழைத் துளியில் விழும்
துளிர் போல
என் உள்ளத்தில் பிறந்தது காதல்
கண்ணின் ஓரத்தில்
ஒளிந்த காதலே
எப்போதும் ஆழமாய் தீண்டுகிறது
நானுன்னை
நினைப்பது போல்
நீயுமென்னை நினைத்து
கொண்டிருப்பாய்
அல்லவா அன்பே
இதயம் சிரிக்கும் போது
வாழ்க்கை ஒரு கவிதை
நேரம் கடந்து போனாலும்
மனதைத் தொடும் பாசம்
ஒரு பூவின் வாசனை போல
நிலைத்து நிற்கிறது
நீ ரசிக்க
மையிட்டு
நானே
கிறங்கி போனேன்
உன் விழிகளில்
நினைத்துக் கொள்ளவது
கூட ஒரு வகையான
சந்திப்பு தான்