இரவின் அமைதியை
உடைக்கும் மூச்சுகள்
இரு இதயங்களின்
இசையை உருவாக்குகின்றன
மௌனமான இரவில் கூட
அவளின் சுவாசம்
நெருப்பாக மாறுகிறது
கனவுகளோடு காத்திருக்கும்
கண்களுக்கு காட்சி
தருவாயோ
இல்லை கண்மையை
கரைப்பாயோ
நீ என்னுடன்
இல்லாத நேரம் கூட
உன் நினைவுகள்
என்னை விட்டு போக மறுக்கின்றன
இருளில் கூட
ஒளி தரக்கூடியது
கண்களின் பேச்சு
நீ உச்சரித்த
பின் தான் தெரிந்தது
என் பெயர்
இத்தனை அழகு என்பதே
என் கண்களை பார்த்தால்
உனக்கே தெரியும்
உன் அன்பே என் சாந்தி
கண்கள் சந்திக்கும்போது
நேரம் நின்றது போல் தோன்றினால்
அது காதல் அல்லாமல் என்ன?
எதையும் விட்டுவைக்காமல்
அனைத்திலும்
கலந்து தொலைத்திருக்கிறாய்
நினைவாக பார்க்குமிடம்
எங்கும் உன் ஞாபகமே
தொலைவில் இருந்தாலும்
இருதயங்கள் அருகில் துடிக்கும்
💖 பக்கம் 28 / 478
📋 Copied