மௌனமாக இருந்த மாலை
அவள் மூச்சில்
கவிதை எழுத ஆரம்பித்தேன்
நீரிலும் அழியா
கோலம்
உன் நினைவு தடம்
தனிமையிலும்
நிழலாய் என்னுடனே
அருகில் இல்லையென்றாலும்
உள்ளத்தில் இடம் பிடித்திருப்பதே
அன்பின் சக்தி
தேடலில் தொலைவதும்
ஒருவித சுகம்தான்
நீயும் உணர்ந்திருப்பாய்தானே
அலையே
வரிகளில்
இல்லாத ரசனை
உன்னிரு விழிகளில்
உணர்ந்தேன்...!
நிலவு கூட
வெட்கத்தால் முகம் மறைக்கும்
உன் பார்வையின் சூட்டில்
நினைவுகளை மட்டுமே
காதலிக்க முடியாது
ஆனால் சிலர்
நினைவாகவே மாறிவிடுகிறார்கள்
நீயில்லா உலகத்தை
நினைத்தாலே பயமாக இருக்கிறது
ஏனென்றால் என் உயிரும்
என் காதலும் உன்னுடன்
பின்னிப்பிணைந்திருக்கிறது
அடுத்த நொடி
எதுவாகவும்
இருக்கலாம்
என்னிறுதி நொடியும்
உனக்கானதாகவே
இருக்கட்டும்
இரவின் அமைதிக்குள்
காதலின் இரகசியங்கள்
மென்மையாக குலுங்கும்
💖 பக்கம் 30 / 478
📋 Copied