தொலைதூர
நிலவானாலும்
தொடும் தூரத்தில்
தானிருக்கின்றாய்
என் மனவானில்
தொலைதூர
நிலவானாலும்
தொடும் தூரத்தில்
தானிருக்கின்றாய்
என் மனவானில்
தேடி வந்து
தேட வைத்து
இன்று நினைவுகளில்
வாழ வைத்து
விட்டாய் என்னை
கண்களின் ஆழம் பேசும் மொழி
எந்த அகராதியிலும் இல்லை
இரு கண்கள்
பேசாத வார்த்தைகளை
காதல் புரிந்துகொள்ளும்
கண்ணோட்டத்தில் புன்னகை
நட்சத்திரம் போல
ஒளிரும் காதலின் தொடக்கம்
நெஞ்சுக்குள் எழும்
ஒரே பெயர்
ஆயுள் முழுக்க
ஓர் காதலாகவே
நிலைத்து விடுகிறது
உன் கண் சிமிட்டலில்
காணாமல் போன என்
இதயம் உன் சிரிப்பினால்
துடித்து கொண்டிருக்கிறது
காலம் நம்மை பிரித்தாலும்
என் உள்ளத்தில்
நீ எழுதிய
காதல் கதையை
அழிக்க முடியாது
தொடுதிரையில்
உன் குறுஞ்செய்தி
இயல்பாகவே அரும்புகிறது
இதழில் குறுநகை
தொடாத தொடுதலே
ஆசையின் தீப்பொறிகளை கிளரச் செய்து
கனவுகளை சூடான நெருப்பாக மாற்றுகிறது