கண்ணால் பேசாதே
வார்த்தைகளும்
மறைந்து
கொள்கிறது
வெட்கத்தில்
நீ கவனிக்கும்
அந்தச் சிறிய
விஷயங்களில்தான்
உன் அன்பின்
ஆழம் தெரிகிறது
அசைப்போடும்
நினைவுகளோடு
அசையாது காத்திருக்கு
விழிகளும்
பல ஆசைகள் கொண்டு
ஆவலோடு உனக்காக
ஆயிரம் மேகங்கள்
வந்து போனாலும்
என் வானத்திற்கு
நீ ஒருவன் மட்டுமே
நிரந்தர நிலவு
மழைத் துளி கன்னத்தில்
விழுவது போல
காதலின் நினைவு
இதயத்தில் விழுந்தால்
நெஞ்சம் மலர்ந்து விடும்
ஆசையின் நெருப்பு
காதலின் மழையில் கூட
அணையாது
அருகில் இல்லையென்றாலும்
உள்ளத்தில் இடம் பிடித்திருப்பதே
அன்பின் சக்தி
உனக்காக காத்திருக்கும்
ஒவ்வொரு நொடியும்
கடிகார முள் கூட
என் இதயத்தை கிழிக்கிறது
ஏதேதோ
பேச நினைத்து
மனம் இப்படியே
பார்த்து கொண்டிருந்தால்
போதுமென்று
லயித்துவிட்டது உன்னில்
மரணமும் வரமே
உன் தோளில்
சாய்ந்திருக்க
எனை தழுவிக்கொண்டால்
💖 பக்கம் 25 / 478
📋 Copied