புகையாய் சூழ்ந்து
தீயாய் எரிக்கிறது
உன் நினைவு தணல்

மூச்சின் வேகத்தில்
கிளர்ந்த விருப்பம்
இரவின் இருளை
நெருப்பாக மாற்றுகிறது

நீ
கவனிக்காமலே
கடந்து
செல்வதால்
உன்மீது காதலும்
வளர்கிறது...!

கரம்பிடித்து
இதழ் அணைத்து கதைக்க
கனா இருந்தாலும்
விரல் தொடாமல்
விலகி இருப்பதில்
வினோத சுகம்
கண்மணியே

நெருக்கத்தில் கலக்கும்
ஒவ்வொரு நொடியும்
பரவசத்தின் புயல்

நேற்று வரை
எதையோ தேடினேன்
இன்று என்னையே
தேடுகிறேன் உனக்காக

கோர்க்கின்றேன்
மலரோடு மனதிலும்
ஒரு மாலை
கனவோடு
நீ வந்தால் சூட

நீ பேசும் ஒவ்வொரு வார்த்தையும்
காதல் கவிதையாக
எனது இதயத்தில் பதியிறது

நேசத்துடன் உன் விரல்
தனில் என் விரல் கோர்த்து
மரணம் வரை நம்
உறவை தொடர ஆசையடி

இரு பார்வைகள்
சந்திக்கும் தருணம்
உலகமே மறைந்து போகிறது