உறங்காமல்
ஒரு கனவு
உன் அன்பின்
துளிகளை
பஞ்சணையாக்கி

காதல் ஒரு மெழுகுவர்த்தி போல
தீ கொளுத்தினால் கருகும்
ஆனால் அதன் ஒளியில்
இருவரும் பிரகாசிப்பார்கள்

இதயம் தன்னாலே
ஒரு பெயரை துதிக்க
தொடங்கும் தருணம் தான் காதல்

சுவாசிக்கும்போது கூட
அவளது வாசனையே தேடும்
இந்த ஆசை ஏற்கனவே அடிமை

பேசுகின்றது
உன் நினைவும்
கெஞ்சலும்
கொஞ்சலுமாய்
உனைப் போலவே
எனையும் மௌனமாக்கி

தொலைவாய்
என தோன்றவில்லை...!!
தேடுதலில்
என் எண்ணமில்லை...!!
விலகியும்
நீடிக்கிறாய் என்னருகில்...!!
(பிரியாத - வரமாக)

இதயம் தாண்டி
ஓடும் அலைகள்தான்
காதல் எனும் பெருங்கடல்

கைகளைப் பிடித்து விடும்
தருணம் இல்லை என்றாலும்
மனதை பிடித்துவிட்டாள்

உன்
வருகையை
நோக்கியே
என்
பார்வை....

மற்றவர்கள் பொறாமை
கொள்ளும் அளவிற்கு
உன்னை காதல்
செய்திட வேண்டும்
இனிய காதலர் தின
வாழ்த்துக்கள் என் கள்வா