தனிமையும்
பிடித்துப்போனது
என்னுடன்
உன் நினைவுகளும்
வந்துவிடுவதால்
எங்கோ நீயிருந்தாலும்
எனை மறக்காமலிருக்கிறாய்
என்றுணர்கிறேன்
உன் மிஸ் யூ வில்
மௌனம் கூட
காதல் பாடல்கள் பாடும்
நேரம் உண்டு
தோளில் சாயும்
அந்த மென்மையான நிமிடம்
வானில் பறக்கும்
ஒரு கனவுப் போலிருக்கும்
மனதையும்
உடலையும்
ஒரே நேரத்தில்
புலம்ப வைக்கும்
அந்த நெருக்கமே ரொமான்ஸ்
நெருக்கத்தில் நேரம் மறைந்து
சுவாசத்தில் காதல் கரைகிறது
இரவில் தொடும் விரல்கள் விட
இரவில் நினைக்கும்
ஆசைகள் தீவிரமானவை
முகத்தை பார்த்த போது
நடந்த கலக்கம்
உடலை மறந்த
பித்தத்தைப் போல இருந்தது
மூச்சுகள் கலந்து
செல்லும் தருணம்
ஆன்மாவையே உருக வைக்கும்
அன்பு சொற்களில் இல்லை
அது செயல்களில்
அமைதியாக வாழ்கிறது
💖 பக்கம் 223 / 493
📋 Copied