அருகில் இருந்தாலும்
தொட்டுவிட முடியாத தேடல்
அது தான் காம உணர்வின் சூட்சுமம்
ஒன்றாக இருந்த நிமிடங்கள்
வாழ்க்கையே ஒரு கனவாக
மாறச் செய்கின்றன
காதல் வந்ததும்
மனம் மெதுவாக உலகத்தை
மன்னிக்கத் தொடங்குகிறது
ஒரு மெல்லிய முத்தம்
ஆயிரம் வார்த்தைகளின்
அர்த்தத்தை சொல்லி விடும்
சுவாசம் கலக்கும்
நொடியில் உலகமே கரையும்
மனசு விட்டு பேச
எவ்வளவோ இருக்கு
ஆனால் கேட்க தான்
நீ அருகில் இல்லை
நீ கெஞ்சும் போது
மிஞ்சினாலும்
உனை கொஞ்ச
தவறியதில்லை
சிறு குழந்தையாய்
மைனாக்கள் கூட
உன்னிடம் கூடு கட்ட
கற்றுக்கொள்ள ஆசை
படுகிறதடி மங்கை நீ
கூந்தல் கட்டும்
அழகை பார்த்தபின்
சிறகிருந்தும்
சிறைபட்டிருக்கின்றேன்
உன் மனக்கூண்டில்...
நீ வாரி
கொள்ளும்
போதெல்லாம்
தாவி குதிக்கும்
சிறு குழந்தை
தான் நானும்
அன்பில்
💖 பக்கம் 216 / 478
📋 Copied