ஊடலின் போதெல்லாம்
சிறு ஆறுதல்
நம் சண்டைகளுக்கு
ஆயுளில்லை என்ற
உன் வார்த்தையே
தயக்கம் இருந்தாலும்
நெருக்கத்தை தூண்டுகிறது
உன் நேசம்
நீ என்னவன் என்று
மௌனத்தில்
கலந்து கொண்ட காதல்
இசையை விட இன்பமானது
உன் குரல் கேட்டதும்
முகம் பார்க்கணும்னு தோணும்
முகம் பார்த்ததும்
அருகில் இருக்கணும்னு தோணும்
இந்த ஆசைக்கு அடுத்த கட்டம்
என்னவென்று தெரியவில்லை
சிரிப்பு ஒரு முகத்தில்
மட்டும் இல்லாது
அது இதயத்தில் ஒலிக்கும் ஒலி
விழிகளால் தொடும் போதே
உடல் முழுக்க ஓர் அதிர்வலை
உன் ஒரு
"நீ சாப்பிட்டாயா?"
என்ற கேள்வி கூட
என் வாழ்க்கையில்
முக்கியமான அன்பு
விரல் நழுவும்
அந்த ஒரு தொடுதல்
எண்ணங்களைச் சிதறடிக்கிறது
பார்வை மாறினாலும்
இதயம் அதே முகத்தை தேடுகிறது
வாழ்க்கை படகில்
நீண்ட தூரம்
பயணிக்க வேண்டும்
அதுவும், எனக்கு பிடித்த
உன்னுடன் மட்டுமே
💖 பக்கம் 215 / 493
📋 Copied