பூட்டிக் கொண்டேன்
உன்னில் என்னை
தொலைந்தாலும்
உன்னோடு
தான் என்றே
இதயத்தின் இருளில்
மலரும் ஒரே ஒளி காதல் தான்
இதயத்தின் துடிப்பில்
காதலின் ராகம் ஒலிக்கிறது
எழுத்தில் இருக்கும்
என்னையும்
மனதில் இருக்கும்
உன்னையும்
வெளிப்படுத்தவே முடியாமல்
நமக்கான சந்திப்பு என்பது
பெரும்பாலும்
மௌனத்திலேயே விடைபெறுகிறது
மனது பேசவில்லை
ஆனால் கைகள்
மறுக்கவே இல்ல
சிக்கிமுக்கி
கற்களாய் விழிகள்
மோதிக் கொண்டதில்
சிதைந்து
போனதென்னவோ மொழிகள்
கண்ணின் ஓரத்தில்
ஒளிந்த காதலே
எப்போதும் ஆழமாய் தீண்டுகிறது
மழை
நின்ற பின்னும்
இலையில்
ஒட்டியிருக்கும்
நீர் துளிகளாய்
நீ சென்ற
பின்னும்
மனதை நனைக்கின்றது
நினைவு துளிகள்
நீ என்னோடு
தான் இருக்கிறாய்
நானாக
நான் ஆசை
படுவதெதுவும்
நிராசையானதில்லை
உன்னாசைகள்
எனக்காக என்பதால்
💖 பக்கம் 211 / 478
📋 Copied