நான் தவறாக இருந்தாலும்
என்னை விட்டுப் போகாமல்
நிற்கும் மனசு தான் காதல்
நினைவுகளின்
நிழலில் கூட
காதல் சிரிக்கிறது
தீரா காதல்
தீர்ந்தும் போகாது
நீர்த்தும் போகாது
மடியில் சாய்ந்த தலையில்
கவிதைகள் பிறக்கின்றன
பார்வைகள்
கடந்து செல்லும்
அந்த நொடியில்
காதல் பிறக்கிறது
இருவர் சேர்ந்து
பயணித்த பாதை
இப்போது தனிமையின்
தேசத்தில் முடிகின்றது
சரியாக நடந்தாலும்
நடை தட்டு
தடுமாறிதான் போகுது
குழந்தையை போல்
உன் கரம்
பற்றிக்கொள்ளும்
போது
மௌனமாக வந்து
மனதைத் தொட்டு
பாசம் மெதுவாக
உயிரோடு கலந்து பரவுகிறது
இரவில் நிலவு ஒளியைவிட
கண்களில் விழும்
காமத்தின் வெளிச்சம் அதிகம்
உன் மனதை
வாசித்த போது
தான்
என் எண்ணங்களும்
எழுத்தானது
நீயும் என்றோ
வாசிப்பாய் என்றே
💖 பக்கம் 171 / 478
📋 Copied