காதல் ஒரு கூடை
அது அன்பு மலர்களையும்
பாசக் கனிகளையும் சுமக்கும்
சுவாசம் கூட
சூடாக மாறும்
தருணம்தான் காமத்தின் உச்சம்
சாய்ந்து கொள்ள
தோள் தேடினேன்
ஏந்தி கொண்டாய்
அன்பாய்
எங்கும் நிறைந்தவனாய்
நினைவாகி
எல்லைக்குள்
வைத்திருந்தாலும்
நீயென்று வரும்போது
மனம் எல்லையை
தாண்டுகிறது
உனக்காக நான்
அணைத்து கொ(ல்)ள்ளும்
நினைவுகளை விரட்டியடிக்கிறேன்
மீண்டும் மீண்டும்
தட்டி தொலைக்குது மனதை
நீயில்லா பொழுதுகளில்
உன் இதயத்துடிப்பு
என் உடலில்
ஒரு ராகமாக ஒலிக்கிறது
அந்த இசையை மட்டும்
நான் என்றும் கேட்கவேண்டும்
ஒவ்வொரு மெளனமும்
உள்ளத்தில் நெகிழ்ந்த
காதலின் நெருக்கத்தை
வெளிக்கொண்கிறது
போதிய காரணம் இல்லாமல்
ஒருவரை விரும்புவது தான் காதல்
உன் பெயரை
எழுதும் ஒவ்வொரு முறையும்
இதயம் சிரிக்கிறது
உன்னை அணைக்க வேண்டும்
என்ற ஆசை தினமும்
என் இதயத்தில்
மழை பெய்ய வைக்கிறது
💖 பக்கம் 170 / 478
📋 Copied