நிலை நின்ற கண்களில்
செய்திகள் வந்தன
மௌனமாக நெஞ்சோடு
நீ யிருக்கிறாய் என்று
வம்பான
பார்வையை
அம்பாக
எய்கின்றாய்
காதல் என்பது
கண்களில் தொடங்கும்
ஆனால் இதயத்தில்
உயிரோடு நிலைத்து விடும்
கண்கள் பேசும் போது
வார்த்தைகள் தேடப்படுவதில்லை
காதலின் ஆழத்தில்
பிறக்கும் தீப்பொறி தான் காமம்
சில உணர்வுகள்
சொல்லாமல் வளர்கின்றன
ஆனால் இதயம் மட்டும்
சத்தமாக கேட்கிறது
உன் நினைவில்
என் இரவும்
நீள்கிறது...
நெருக்கமான ஒளி கூட
விலகும் நேரத்தில்
காதலின் நிழல் மட்டும்
பின் தொடரும்
எதையும் தாங்கும்
இதயம் தான்
உன் மௌனத்தை
தவிர
தாயின் மடியில் தாலாட்டும்
பாசம் போலதான்
அவளிடம் என் நிம்மதி
💖 பக்கம் 168 / 478
📋 Copied