கடந்தவை திரும்பாது
ஆனால்
நீ திரும்பி
பார்க்க வைக்குறாய்
மனதை கடத்தி
மனதிலும் மத்தாப்பு
பல வண்ணங்களில்
உனை காண
கண்கள்
சந்தோஷ தீப்பொறியாய்
நினைத்துக் கொள்ளவது
கூட ஒரு வகையான
சந்திப்பு தான்
இதயம் பேசும் நொடியில்
மௌனம் காதலாக மாறுகிறது
புன்னகை ஒன்று போதும்
இதயம் முழுதும் மலரும்
சரணடைந்து விட்டேன்
உன்னிடம்
ஏற்றுக் கொள்வாயோ
கொல்வாயோ
எதுவாயினும்
ஏற்றுக்கொள்கிறேன்
நிறைவுடன்
வீழ்த்துவது கடினமல்ல
உனை அன்பில்
ஜெயித்திட வேண்டும்
என்பதே என்னிலக்கு
என் கிறுக்கல்கள்
எல்லாம்
நம் நினைவின்
செதுக்கல்கள்
மன தரையில்
என்றும் சிதைந்திடாத
உன் மூச்சு
அருகில் பட்டாலே
என் இதயம்
தன்னையே
மறந்து துடிக்கிறது
சூடான தேனீர்
பருகியபோதும்
மனதை சில்லென
நினைகிறாய்
மார்கழி குளிராய்
நினைவை தூதனுப்பி
💖 பக்கம் 167 / 478
📋 Copied