உன்னை நினைக்க வேண்டாம்
என்று என் மனம் சொல்கிறத
ஆனால் அந்த மனது தான்
எப்போதும் உன்னைப் பற்றியே
நினைத்துக் கொண்டிருக்கிறது

தடைகள் இல்லாத பார்வை
ஆசையின் முதல் உரையாடல்

சொல்லவந்ததை
சொல்ல முடியாமல்
போவதிலிருந்தே
துவங்குகிறது காதல்

கடவுளிடம் வேண்டுதலென்று
எதுவுமில்லை வரமாக
நீ கிடைத்ததற்கு நன்றி
சொல்லுவதை தவிர

ஆயுள் இல்லா
சண்டைகளில்
அடித்துக் கொள்வதைவிட
அணைத்துக் கொள்வதே அதிகம்

உன் மீது இருக்கும் அன்பால்
என்னை அறியாமல் திரும்பி
பார்ப்பதும் விரும்பி கேட்பதும்
உன் பெயர் ஒலிக்கும் போதே

நீ விட்டு சென்ற மிச்சத்திலும்
தொட்டு சென்ற வெக்கத்திலும்
சிக்கி தவிக்கிறது என் நாணம்
இனிய காதலர் தின
வாழ்த்துக்கள் என் அழகியே

சுவாசமெல்லாம்
உன்னை தேடும் போது
காதல் வெறும் உணர்வு இல்லை

ஒரு பார்வை
வாழ்க்கையை மாற்றும்
அந்த பார்வையை
மறக்க முடியவில்லை

அருகில் இருப்பது
மட்டும் போதும்
காலம் நிற்கிறது போல