எப்படி அலங்கரித்து
கொண்டாலும்
உன் வசீகர
பார்வையின்
முன் அத்தனையும்
அலங்கோலம் தான்
இதயத்தின் துடிப்பு
ஒரே சமயத்தில்
இரு உடம்பிலும் ஒலிக்கும்போது
அது ரோமான்ஸ்
நெருக்கத்தின் சூட்டில்
நேரமே நின்றுவிடும்
ரொமான்ஸ் பிறக்கிறது
காற்றோடு
நான் கலக்கிறேன்
உன் சுவாசக்காற்று
என்னை தீண்டுவதற்கு
நான் உன்னை
நேசிப்பதனால் மட்டுமல்ல
உன்னையே மூச்சுக்காற்றாக
சுவாசிப்பதனால்
கண்ணோட்டம்தான் பழகியது
ஆனா மனசு ஏற்கனவே
உயிரோட பழகிடுச்சு
உன் மூச்சின் துடிப்பை கூட
கவனிக்கும் அளவிற்கு
என் காதல்
ஆழம் கொண்டது
உன்னை நேசிக்கத்
தொடங்கிய பின்பே
எனக்கு என்னைப்
பிடிக்கத் தொடங்கியது
என் அழகே
உனது அன்பு தான்
நீ பேசும்
மொழியிடம்
ஜெயித்து விட்டாலும்
உன் பேசா
மொழியிடம்
தோற்றுத்தான்
போகிறேன் நானும்
இதயம் சுமக்கும்
நினைவுகளைச் சொல்ல
வார்த்தைகள் போதாது
மௌனம் கூட காதலாகி விடும்
நீயிருக்கும்
இடம் மட்டும்
எனக்காகவே ஆன
ஒரு சிறிய சொர்க்கம்
💖 பக்கம் 148 / 478
📋 Copied