என்
எண்ணம்
நீயாகிப்போக
எழுதுகோலும்
கிறுக்குகின்றது
ஓய்வின்றி
மையலை மையில்
கலந்து கவிதையாக

புன்னகை பார்த்த
இடத்தில் தான்
இதயம் தங்கியுள்ளது

மென்மையான மூச்சின் இசை
இரவில் மட்டும்
காதலை கொஞ்சும் லயனம்

காதல் என்பது
மனதில் பூக்கும் ஒரு மலர்
ஆனால் அதன் மணம்
வாழ்நாளெல்லாம்
காற்றில் நிறைந்திருக்கும்

அருகில்
நீயிருந்தால்
விடுமுறை
எடுக்கின்றது
வெட்கமும்

கை கோர்த்துக் கொண்ட நொடி
நித்தியமாக வாழ்ந்த
உணர்வை தருகிறது

அழகிய தீயும் நீ
ஆபத்தான திமிரும் நீ
எனைக் கொல்லும்

என் தாகம்
அறிந்தாய்
எப்படி இப்படி
பருகுகிறாயே நீரை

பிறை போன்ற இரு
புருவங்களுக்கு இடையில்
என்றும் பிரியாமல் அவளின்
கையால் தினந்தினம் நெற்றியில்
ஓடி வந்து ஒட்டிக்கொள்ளும்
ஓர் வெள்ளி நட்சத்திரம்
உன் அழகிய சந்தனம்

காதல் இதயத்தில்
எழுதப்படும் கவிதை
ஆனால் அதை படிப்பவர் ஒருவரே