💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
இதழ்கள் என் மீது தடவப்படும்
ஒவ்வொரு கணமும்
தீயில் கரையும் மெழுகு போல
என்னை மாற்றுகிறது
content_copy
மௌனத்தின் நடுவே கூட
பாசம் பேசும் மொழியாக
மனதிற்குள் ஓடி வந்து நிற்கிறது
content_copy
தவிர்க்க முடியாத
காலை நேர
தேனீராய்
நம் நினைவுகளையும்
நான் சுவைக்க
தவறுவதில்லை
அன்பே
content_copy
தடைகளை எண்ணும் விழிகள்
அனுமதியை எதிர்பார்க்கும்
ஆசையை மறைக்க முடியாது
content_copy
பல காலங்கள்
கடந்தும் கூட
இன்று வரை
காலாவதி ஆகாமல்
இருந்து கொண்டு இருப்பது
காதல் என்ற ஒன்று மட்டுமே
content_copy
கை பிடித்த அந்த சூடே
இரவு முழுவதும் நெஞ்சில் தங்கிவிடுகிறது
content_copy
ஒரு முத்தம் ஓரு நொடி மட்டும்தான்
ஆனால் அதில் நிறைந்த உணர்வு
ஒரு வாழ்நாள் இருக்கும்
content_copy
இரண்டு இதயங்கள்
ஒன்று சேரும்
முதல் இடம் முத்தம்
content_copy
நீ முறைத்தாலும்
காதல் தான்
என்று எனை
வார்த்தையிலும்
கவிழ்த்திடும்
கள்வன் நீ
content_copy
என் கண்களுக்கு
நீ காட்டிய அழகை விட
என் உள்ளத்துக்கு
நீ காட்டிய
அன்பே உயர்ந்தது!
💖 பக்கம் 144 / 478
arrow_back
arrow_forward
📋 Copied