💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
என் கைகள் உன்னைப்
பிடிக்க முடியாத அளவுக்கு
நீ தொலைவில் இருக்கிறாய்
ஆனால் என் இதயம்
உன்னை காதலிக்க
மிக அருகில் உள்ளது
content_copy
தோளில் சாயும் மென்மை
நாள் முழுவதும்
நினைவாக நிற்கும்
content_copy
கைகளை கோர்த்தால்
காதல் மலரும்
உடலை கோர்த்தால்
புயல் எழும்
content_copy
உன் சிரிப்பு எனக்கு
சூரியன் போல
என் மனம் அவ்வளவு
மெல்லிய வெப்பத்தில்
மெழுகாக உருகுகிறது
content_copy
மையில்
கிறுக்கப்படாத
பல கவிதைகள்
விழியில்
மையிட்டு
மையலோடு
காத்திருக்கு
நீ படிக்க...
content_copy
சுதந்திரமான மனதும்
சுயநலமாகி போனது
உனதன்பு எனக்கே
எனக்குமட்டும்
சொந்தமென்று
content_copy
ஆயிரமாயிரம் யுகம்
காத்திருப்பேன் நான்
உன்னை காணும்
ஓர் நொடிக்காக
content_copy
இரவு நேரத்தின் அமைதியில்
மூச்சுகள் பேசும் காதல் தான் உண்மை
content_copy
மழை நனைக்கும்
ஒவ்வொரு துளியும்
அவளின் நினைவை தட்டுகிறது
content_copy
தொடுதிரையில்
உன் குறுஞ்செய்தி
இயல்பாகவே அரும்புகிறது
இதழில் குறுநகை
💖 பக்கம் 143 / 478
arrow_back
arrow_forward
📋 Copied