மூச்சுகள் கூட
ஒன்றோடு ஒன்று கலக்கும்
தருணமே பரவசம்
மூச்சுகள் கூட
ஒன்றோடு ஒன்று கலக்கும்
தருணமே பரவசம்
ருகில் இருப்பதே போதும்
மனம் முழுதும் மலர்கிறது
கண்ணோட்டம்
ஒரு நொடிக்குள் நிகழ்ந்தாலும்
அதில் வாழ்நாள் காதல் வந்துவிடும்
நிறைவேறாத ஆசைகள் பல
உன்னைப் பற்றி நினைப்பதை
சொல்ல முடியவில்லையே
என்பதையும் சேர்த்து
நீ மட்டும் அழகில்லை
உன்னை நினைத்தே
உள்ளுக்குள் இம்சை
செய்யும் உன்
நினைவுகளும் இன்னும் அழகு
காற்றோடு
நான் கலக்கிறேன்
உன் சுவாசக்காற்று
என்னை தீண்டுவதற்கு
நான் உன்னை
நேசிப்பதனால் மட்டுமல்ல
உன்னையே மூச்சுக்காற்றாக
சுவாசிப்பதனால்
முகம் நெருங்கும் போதெல்லாம்
இதயமோ தவிக்க ஆரம்பிக்கிறது
சேமிப்பென்று
எதுவுமில்லை
நம் நினைவுகளை
தவிர
சந்திரன் கூட பொறாமைப்படும்
புன்னகை தான் என்னை ஈர்க்கிறது
இரவின் அமைதியில்
கலந்து வரும் பார்வை
காதலின் கவிதையை எழுதுகிறது