மௌனத்தில் விளங்கும் காதல்
சத்தமில்லா கவிதையைப் போல்

மாலை நேரத்தின்
சிவந்த வானம் போல
இதயத்தின் ஆழத்தில்
பாசம் மெதுவாக பரவுகிறது

யார் இல்லாமல்
வாழ முடியாதோ
அவர்களோடு வாழ்வது தான்
மகிழ்ச்சியான வாழ்க்கை

தொட்டுப் பேசாத
கைகளில் கூட
காதல் சில நேரம் ஓர் புரட்சி

தொடுக்கின்றாய் அழகாய்
தொடுத்திரையில்
வார்த்தைகளை
தொற்றி கொல்(ள்)கிறது
நாணமும்
நீ தொடாமலேயே

காற்றாய்
தீண்டி காணாமல்
போகின்றாய்
மனதில் ஆசையெனும்
புயலை தூண்டி

சிரிப்பு ஒருவருக்காக தோன்றும்போது
காதல் ஒரு கவிதை போல
உயிர் பெறுகிறது

பேசியவர்கள் பேசாமல்
போனால் பேசியதை
எல்லாம் பேசிப் பேசியே
கொல்லும் நினைவுகள்

மௌனமாக இருந்தாலும்
இதயம் ஒருவருக்காக
ஏங்கும் இசையை
மனம் கேட்டு உருகிவிடும்

சுவாசத்தில் கலக்கும்
அவளின் வாசனை
தூக்கத்தையே மறந்து விட வைத்தது