மௌனம் கூட
பேசும் நேரம் வந்தால்
காதல் ஆழமாகி விட்டது

இதயத்தின் ஆழத்தில்
பிறக்கும் காதல்
உடல் மொழியில்
இசையாக வெளிப்படுகிறது

மெல்லிய கருணையின் தொடுதலில்
மனம் புதிய நம்பிக்கையால்
நிறைந்து மலர்கிறது

வேண்டும்போது
கிடைக்காத காதலும்
வேண்டாத போது
கிடைக்கும்
காதலும் உயிரற்றதுதான்

கைகளின் ஊடாக
பாயும் மின்சாரம்
விருப்பத்தின் நெருப்பு

விரல்களின் தொடுதலில்
குமுறும் மனது தான்
உண்மையான ஆழமான காதல்

தொட்டும் தொட்டாமலும்
இடையே ஒரு கனிந்த
உணர்வு நிறைந்தது

நான் என்றோ
தொலைந்தேன்
உன்னுள்
உனக்குள் நான்

விரலின் தொடுதலில்
தீப்பொறி ஏறும் உணர்ச்சி
காதலைவிட ஆழமாக எரிகிறது

உன்னில் ஏக்கமென்று
எதுவும் இல்லாதபோதிலும்
ஏதோவொரு தாக்கத்தை
ஏற்படுத்ததான் செய்கிறாய்
உனை நினைக்க வைத்து