சண்டைபோடு பேசாமல் இரு
நிதானமாக யோசித்துப்பார்
உன்னுள் இருப்பது
என் காதல் மட்டுமே
அப்படியென்ன மாயமோ
புரியவில்லை
நிஜம்கடந்த
நினைவுலகில் மட்டுமே
வாழ்கிறது
நம் சந்தோச
தருணங்கள் அனைத்தும்
ஆசை சில நேரம் பாவமல்ல
அது உயிரின் அதிர்வு
நினைவுகளின் அலைகள்
காதலின் கரையில்
மெல்ல வந்து
இதயத்தை தொடும் போதே
பரவசம் எழுகிறது
மாலையின் அமைதியில்
நினைவுகள் காதலின்
இசையாக வந்து
இதயத்தை நனையச் செய்கின்றன
கொடுத்து
செல்கிறேன்
இதயத்தை
எடுத்து வா
காதலிருந்தால்
என் மீது
தூரத்தை கடந்த நினைவுகள் தான்
நெருக்கத்தை மீட்டெடுக்கும்
உணர்ச்சியாக திகழ்கின்றன
தூரம் இருக்கையில் கூட
அவளது நினைவுகள்
தோளில் சாய்ந்து
நித்திரை கொள்ளும்
நொடிகளில் தொடங்கி
மணித்தியாலங்களையும்
கடந்து ரசிக்கின்றேன்
அலுப்பதுமில்லை
சலிப்பதுமில்லை
உன்னுடனான
உரையாடல்களில்
உரையாடலை வேண்டாமென்று
சொல்லும் மௌனமும்
காதலின் தீவிர ஆசையை சொல்கிறது
💖 பக்கம் 138 / 478
📋 Copied