காதல் என்பது
ஒரு முறை சொன்ன
வார்த்தை அல்ல
தினமும் உருமாறும் உணர்ச்சி

அலையாய் வீசும்
உன்னன்பில்
மிதக்கின்றேன்
காகித கப்பலாய்
சந்தோஷ கடலில்

உன்னுலகம்
பெரிதாக இருக்கலாம்
ஆனால்
எனக்கான உலகம்
நீ மட்டுமே

அன்பில் உருவான
உறவு கணவன்
மனைவி உறவு

கைகள் பேசும்போது
இதயங்கள் பதிலளிக்கும்
அதுதான் ரொமான்ஸ்

ஆசையாய்
அலங்கரித்து கொண்டாலும்
நீ ரசிப்பதை
காணும் தைரியம்
இன்னுமென்
விழிகளுக்கு இல்லை

மூச்சின் வேகம் கூட
நொடிகளில் மாறும்
விரல்கள் பதியும்போது

நீ இல்லாமல்
நான் இல்லை
என்பது கூட
பொய்யாக இருக்கலாம்
ஆனால்
உன்னை நினைக்காமல்
நான் இல்லை என்பதே மெய்

ஒரே பெயரை இதயம்
நாள்தோறும் உச்சரிப்பதே
காதலின் பிரார்த்தனை

பூக்கள் உதிர்ந்த பின் கூட
அதன் மணம் மாறாதது போல
சில காதல்கள் என்றும் வாடாது