தயங்காமல்
கொன்று விடு
இல்லயேல்
நானுனை வென்றிடுவேன்
காதல் களத்தில்
பிடித்த இசையை
மௌனமாய்
ரசிப்பது போல்
உனையும்
ரசித்துக் கொண்டிருக்கின்றேன்
மனதோடு மிகமிக பிடித்து
வாழ்ந்திட வேண்டும்
உன் கண்களுக்குள்
நானும் நாளும்
திரும்பிவரும் வழியெல்லாம்
தேடுகிறேன்
உன்னைப் பார்க்கவந்தபோது
பேச நினைத்து
எடுத்துவந்த வார்த்தைகளை
உதடுகள் நெருங்கும் முன் கூட
உடல் உணர்வை அறிந்துகொள்கிறது
மெதுவாக நெருங்கும் பார்வை
இதயத்தின் ஆழத்தைத் தொடுகிறது
சுவாசம் கலக்கும்
தருணங்கள்
காதலின் தீவிரமான
ஆழம் சொல்லும்
உன் காதல் எனக்கு
ஒரு புதிய உலகத்தை திறக்கிறது
அந்த உலகில் உன்னுடன்
நான் வாழும்
ஒவ்வொரு நொடியும்
என் வாழ்வின்
சிறந்த தருணமாகும்
காற்றில் கூட
ஈரத்துவம் தேடும்
அந்த தருணம்
தீவிர ஆசையின் அடையாளம்
காகித பூவிலும்
காதலின் நறுமணம்
உன் நேசத்தின்
நெருக்கத்தில்
💖 பக்கம் 135 / 478
📋 Copied