காதலில் காத்திருப்பது
சுகம் தான் அதற்காக
அடுத்த ஜென்மம் வரை
காத்திருக்க விடாதே
காதலில் காத்திருப்பது
சுகம் தான் அதற்காக
அடுத்த ஜென்மம் வரை
காத்திருக்க விடாதே
முகம் நிமிராமல்
ரசிக்க வைக்கும்
மன அழுத்தமே காதல்
எங்கிருந்தோ
நினைவை
அள்ளி தூவி
நனைக்கின்றாய்
மனதை
மார்கழி குளிராய்
மன்னித்து விடு
என்பது அன்பு
அதை அப்போதே
மறந்து விட்டேன்
என்பது பேரன்பு
காற்றில் கலந்து வரும் வாசனைக்கும்
காதலனின் அணைப்பிற்கும்
வித்தியாசமே இல்லை
புன்னகை பார்த்த நொடியே
மனம் ஒப்பந்தம் செய்துவிட்டது
கண்கள் சொல்லாத
வார்த்தைகளை துடிப்பே
மொழிபெயர்க்கும் போது
காதல் பிறக்கிறது
காணாமல் போன
என் புன்னகையும்
நொடியில் மலர்கிறது
உனை காணும்
போதுதான் மகிழ்வோடு
உன்னோடு
பேச முடியாத போது தான்
உன் மீது உள்ள அன்பு
இன்னும் அதிகரிக்கிறது
மறைந்திருந்து கேட்டாலும்
மனதை மயக்கும்
இசையாய்
என்னை மயக்குகிறாய்
ரசிக்க வைத்தே உனை