💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
தொடர்வண்டி என்னதான்
வேகமாகச் சென்றாலும்
அதைவிட வேகமாக
பின்நோக்கியே செல்கிறது
மனது
content_copy
ஒருவரின் நினைவு வந்தாலே
மனம் சற்று இலகுவாகி விடுகிறது
content_copy
கண்ணோட்டம் மட்டுமே
போதுமானது
இதயம் முழுவதும் புரண்டுவிட
content_copy
உன்னால்
தண்டனை
அனுபவிக்கின்றது
நகமும் கொஞ்சம்
திருப்பிக்கொள்
உன் பார்வையை
content_copy
என் கவலைகளுக்கு
நீ மருந்தாகின்றாய்
உன் கவலைகளை
மறைத்து
content_copy
இருவரின் அமைதி கூட
சில நேரங்களில்
காதல் உரையாடலாகும்
content_copy
கண்கள் சந்திக்கும் நிசப்தம்
ஆழமான காதலை அறிவிக்கிறது
content_copy
நேசிக்கும் மனது
அசையாமல் நிலைத்தால்
காலமும் அந்த காதலை
விட்டு செல்ல முடியாது
content_copy
முப்பொழுதும்
நீயென் அருகில்
இல்லாவிட்டாலும்
எப்பொழுதும்
என் நினைவிலிருக்கிறாய்
என்னவனே
content_copy
தள்ளி இருப்பதினாலேயே
தவிக்கிறேன் என்று சொல்ல
முடியாதடி நொடிப்பொழுதும்
நினைவுகள் உன்னிடம்
நிறைந்து இருக்கையில்
💖 பக்கம் 121 / 478
arrow_back
arrow_forward
📋 Copied