உன் மௌனத்தை
மொழி பெயர்க்க
முனைந்தேன் வார்த்தைகள்
நிசப்தமாய் அலைகின்றன
உன் மௌனத்தை
மொழி பெயர்க்க
முனைந்தேன் வார்த்தைகள்
நிசப்தமாய் அலைகின்றன
பூவில் தேன்
எவ்வளவு இருக்கிறதோ
அந்த அளவுக்கே
என் மனதில் அவளுக்கான இடம்
மழை சின்னம் போல
அவளது சிரிப்பு
என் மேலே விழும்போது
உடல் முழுக்க சிலிர்ப்பு
காதலும்
கற்று தந்தது
கள்ள தனத்தை
உனை திருட்டு
தனமாய் ரசித்திட
உனை தேடி
மனம் தொலையவே
ஊடலை தருகிறாயா
மௌனமாக கையில் உருகும்
அந்த நொடி
ஒரு நூல் எழுதும் அளவுக்கு
ஆழம் கொண்டது
அழகு என்று
ஒரு வடிவம் இருந்தால்
அது அவளின்
மென்மையான தொடுதான்
உனது இதயத்தில் எனக்கான
இடத்தை யாரையோ வைத்து
நிரப்பியவனாய் நீ ஆனால்
உன்னுடைய இடத்தை
யாரையும் நிரப்ப
விடாதவளாய் நான்
வாடிய மனதுக்கு
மலர் கொத்தானாய்
(சு) வாசம் தந்து
அழகு என்னவென்று
தெரியாமலே
ஒருவரை பார்க்கும்
கண்கள் காதலிக்கின்றன