மின்னஞ்சலின் எழுத்துகளில்
உன் இதயத்தை கண்டேன்

அருகில் சாயும் தோள்
கனவுகளை விட
இனிமை தருகிறது

மௌனம் கூட
காதலுடன் காதலிக்கிறது

மௌனமாக கலந்து
வரும் மூச்சுகள்
இரு உயிர்களையும்
ஒரே துடிப்பில் இணைக்கின்றன

இதயம் பேசும் நொடியில்
மௌனம் காதலாக மாறுகிறது

மௌனமாக நடந்த காதல் தான்
அதிகம் பேசும் உணர்வு

மவுனமே
வாழ்க்கையான போதும்
அவளின் கொலுசு சத்தம்
இன்பமென என்னை
வாழச்செய்கிறது

மனதிலும்
ஒரு காதல் கீதம்
சலங்கை ஒலியாய்
உன் கரம்
மா(மீ) ட்ட

கண்கள் பேசும் மெளனம்
இதயம் உரைக்கும் உண்மை
காதலுக்கு அடையாளம்

கண்களில் பிறக்கும் கனவு
இதயத்தில் நனையும் காதல்