தென்றலும் சுடுகிறது
உனை தீண்டாத காற்று
எனை தீண்டியதாலா
நெருக்கத்தின் மௌனம்
காதலின் மிக அழகான மொழி
விழிகள் பேசும் நிமிடம்
உள்ளம் தவிக்கும் நேரம்
பார்வை ஒருமுறை
சந்தித்தபோது
உலகமே திசை மாறியது
மௌனம் பேசும் நேரத்தில்
இதயங்கள் தான்
முதலில் முத்தம் கொள்கின்றன
பார்வை ஒரு வாக்கியம்
அதில் மறைந்திருக்கும்
காதல் ஒரு கவிதை
நான் கேட்டு ரசித்த
கவிதைகளும்
அவள் சொல்ல விரும்பிய
வார்த்தைகளும்
அவளின் இரு விழிகளுக்குள்
புதையல்களாய்
கொட்டி கிடக்கின்றன
மனமும் எப்போதும்
மார்கழி தான்
உன் அன்பின்
சாரலில்
நனைந்துகொண்டே
இருப்பதால்
குளிர்மையாய்
இதயம் ஒரு பெயரை
மறக்க முடியாத வரை
அது ஒரு காயமல்ல
(காதல்)
பார்வையின் ஆழத்தில்
சொந்தம் தோன்றும்
அதுவே காதலின் முதல் மெளனம்
💖 பக்கம் 110 / 478
📋 Copied