நேரம் நின்றுவிடும் போல
பார்வைகள் பேசும்
அந்த அமைதி ரொமான்ஸ்
மணிக்கணக்காய்
பேச வேண்டும்
என்ற எண்ணமில்லை
நீ பேசினால்
மணித்தியாலங்கள்
கரைவது கூட
தெரிவதில்லை
ஒரு சிரிப்பில் கூட
உலகம் முழுதும்
ஒளியாய் பரவுவது
காதலின் அதிசயம்
நிழல் போல
மனதோடு சேர்ந்து நடக்கும்
நினைவுகள்
காதலின் மென்மையான
தடமாக மாறுகின்றன
வாசலில் நிற்கும்
அவள் உருவம்
என்னுள் ஒரு
காதல் பரிசை எழுப்புகிறது
உறங்கினால் கனவில்
வருகிறாய் உறங்காவிடில்
நினைவில் வதைக்கிறாய்
காத்திருக்கிறேன் உன்னை
விரைவில் அருகில் காண
சத்தமின்றி கூந்தல்
கலைத்து செல்லும்
காற்றாய் மனதை
கலைத்து செல்கிறாய்
நினைவில் தீண்டி
பல பக்கங்களை
புரட்டிய போதும்
ஒரு பக்கத்திலும்
அறிய முடியவில்லை
உன் மௌனத்துக்கான
காரணத்தை
மன புத்தகத்தில்
சிற்பி செதுக்காத சிலையாய்
என் இதயத்தில்
நீ காலம் கடந்தும்
உன் புன்னகை மட்டும்
அங்கே அழியாத காவியம்
நான் உயிருடன் இருக்கும்
வரை உன்னை என்றும்
இதயத்தில் வைத்திருப்பேன்
💖 பக்கம் 105 / 478
📋 Copied