இதயத்தின்
சின்ன ஓசை கூட
காதலின் இசையாக மாறுகிறது
தொட்டதிலிருந்து
சதம் எடுக்கும் உடல்
காதலின் பசியை
கட்டுப்படுத்த முடியவில்லை
இருளில் நெருங்கும்
ஒரு தொடுதல்
ஆயிரம் கனவுகளை கிளப்பும்
தூக்கத்தில் பார்த்த கனவில்கூட
அவளது நிழலை
விட்டு விட மனமில்லை
சிறகடித்து
பறந்த நான்
சிறைபட்டுப்போனேன்
உன் நினைவில்
இடைவெளி நீண்டாலும்
இடைவேளை விடாது
நினைவுகளை பரிமாறிக்
கொள்வதே ஆழமான காதல்
நேசிப்பவன்
இதயத்தில் வாழ்ந்தாலும்
உண்மையான காதல்
நினைவுகளில் நிறைந்திருக்கும்
இரவின் அமைதியில் கூட
இதயங்கள் பேசிக்கொள்கின்றன
நம் மீது அன்பு
வைத்துள்ள இதயம்
தொலைவில் இருந்தாலும்
ஆயுள் வரைக்கும்
அன்பாக இருக்கும்
காரிருள் சூழ்ந்தாலும்
நம் காதல் வானில்
ஜொலிப்போம்
பௌர்ணமியாய்
💖 பக்கம் 106 / 478
📋 Copied