காத்திருத்தலும்
சுகம் தான்
தொலைதூர
காதலில்
சற்றுநேரம்
அனுமதி கொடு
நம் இதயங்கள்
சேர்ந்து கட்டிய
காதல் மாளிகையை
விடவா
இது அழகென்று
பார்த்து விடுகிறேன்
முகம் தொடாமல்
புன்னகையை வருடும் பார்வை
இதயத்தில் காற்றாய் ஓடும்
தளராத பிடிக்குள்
துளிர் விடுகிறது
நம் காதல்
படிக்கும் எதுவும்
பதிய வில்லை
மனதில் கண்கள்
உனையே வாசிப்பதால்
சிரிப்பு பார்த்தபோது
மனம் தன் திசையை மறந்தது
நினைவில்
என் நிழலில்
என அனைத்திலும்
நீயாகிப்போனாய்
அத்தனை கோபங்களையும்
சட்டென
கரைத்து விடுகிறாய்
உன் குறும்புகளில்
கெஞ்சலிலோ
கொஞ்சலிலோ
முற்றுப் புள்ளி வைத்து
விடுகிறாய்
நம் ஊடலுக்கு
நீ தடுக்கும்
போதெல்லாம்
தவித்து போகுது
மனம்
இனி விலகலே
கூடாதென்று
நமக்கிடையில்
💖 பக்கம் 104 / 478
📋 Copied