என் சோகத்தில்
உன் மனம்
வாடுவதால்
அணிந்து கொள்கின்றேன்
புன்னகையெனும்
கவசத்தை

போர்வைக்கு
அடங்காத
குளிரும்
உன் தோள்சாய
அடங்கிப்போனது...

என் நினைவில் இன்றும்
இருக்கிறான் அவன் என்
இதயத்தை உடைத்தவனாக
அல்ல உடைந்த இதயத்தோட
வாழ கற்றுத்தந்தவனாக

பார்வை மட்டும் போதாது
அருகில் வரும் ஒவ்வொரு நொடியும்
அகத்தின் ஆசையை ஊட்டுகிறது

நிமிடங்கள் போகலாம்
ஆனால் ஒரு தீவிரமான முத்தம்
ஆண்டுகள் முழுவதும்
நினைவில் இருக்கும்

உன்னருகில் உன் நினைவில
மட்டுமே என் மகிழ்ச்சியெல்லாம்

சில நேரம் நினைவில்
சில நேரம் அருகில்
பல நேரம் தொலைவில்
ஆனால் நீ என்றும் என் மனதில்

நினைவில் ஓர் பெயர் நிலைத்தால்
வாழ்க்கை அதில் தங்கி விடும்

உன் அன்பின் தொடக்கம்
யாராக இருந்தாலும்
உன் அன்பின் முடிவு
ஆயுள் வரைக்கும்
என்னோடு இருந்தால்
மரணம் கூட சுகமே

இதயத்தில் விதைக்கப்பட்ட நம்பிக்கை
காலத்தால் வளர்ந்து மலராகிறது