இந்த பிடிவாதமும்
பிடித்திருக்கு
நீ எனக்காக
காத்திருப்பதால்
இந்த பிடிவாதமும்
பிடித்திருக்கு
நீ எனக்காக
காத்திருப்பதால்
ஒரு கணம் கூட
அவளின்றி கழிக்க முடியாத
பிழைபடம் போல் வாழ்கிறேன்
உன் பார்வை
வெப்பத்தில்
நானுமொரு
மெல்ல உருகும்
மெழுகுதான்
மனதோடு மாலையாய்
எனை சூடிக்கொள்
உன் உள்ளத்தில்
உதிராத மலராய்
நானிருப்பேன்
உன்னெதிரே
நான் இல்லாத
வேளைகளிலும்
உன் விழிகளுக்குள்
வாழ்வதும்
நானென்றறிவேன்
என்னவனே
மௌனமாக இருந்த மாலை
அவள் மூச்சில்
கவிதை எழுத ஆரம்பித்தேன்
அங்கே
நீ இங்கே
நான் நமக்கான
இடைவெளியில்
அழகாய்
பயணிக்கிறது
நம் காதல்
தடையின்றி
தொட்டும் இல்லாத
ஒரு அணைப்பு
நெஞ்சில் ஆழமாக பதியும்
உன் நெற்றி
தீண்டும் போதெல்லாம்
நீ திலகமிட்ட
அழகிய தருணம்
என்னுள்ளும் என்னவனே
விரைவான மூச்சில் கூட
ஆசையின் தீ பாய்ந்து
கனவுகளை எரியவைக்கிறது