மூச்சின் இடைவெளியில் கூட
இச்சையின் தீ எரிந்து
கனவுகளுக்குள் மறைந்த
விருப்பங்களை எழுப்புகிறது

அவளின் சிரிப்புக்கு பிறகு
சோகமே வரக்கூடாது போல
ஒரு பயம் தோன்றுகிறது

என் பக்கத்தில்
நீ இருந்தால்
இன்னும் நெடுந்தூரம்
பயணிக்கும் என் காதல்

ஆறுதல் கூற
ஆயிரம்பேரிருந்தாலும்
உன்
அருகாமையைபோலாகுமா

மழை தரும் மண்வாசனை போல
காதலின் நினைவுகள்
மனதின் அடுக்குகளில்
நிதமாக தேங்கி இருக்கின்றன

நம் நினைவுகளுடன்
விடிகிறது ஒவ்வொரு
பொழுதும் நம்
புகைப்படங்களுடன்
நகர்கிறது ஒவ்வொரு
ஊரடங்கும் எனக்கு

நசுங்கும் விரல்கள் கூட
காதலின் பிழைகள் போல்
இனிமையோடு கீறுகின்றன

பார்வை ஒன்று போதும்
வாழ்நாள் வேரூன்றும் காதலுக்கு

காற்றின் மென்மை கூட
சில சமயம்
காதலின் தீவிரத்துக்கு கீழே

சுமக்கின்றேன் என்று
அதிக வலிகளை
கொடுக்காதே
உடைந்திடும் என்னிதயம்