துணிவுடன் தொடங்கிய பாதை
வெற்றியுடன் முடியும்
உண்மையான மகிழ்ச்சி
எதிர்காலத்தைப் பற்றிய
கவலையில்லாமல் நிகழ்
காலத்தை அனுபவிப்பதே
மனம் உடைந்தாலும்
காலம் அதை ஆற்றும் மருந்து
காலத்தில்
செய்யும் உதவியும்
காலம் தாழ்த்தாமல்
சொல்லும் நன்றியும்
காலங்கள் போனாலும்
நெஞ்சிலே நிலைத்திருக்கும்
தனிமை வேதனை
ஒரு நாள் மீள்வேன்
என்ற நம்பிக்கை
(மனதைரியம்)
வாழ்க்கையில்
பிடித்தது எல்லாமே
கிடைப்பதும் இல்லை
கிடைத்த எல்லாவற்றையும்
பிடித்தது போல்
மாற்றவும் முடிவதில்லை
ஆனாலும் வாழ்கிறோம்
ஆயுள் முடியும் வரை
வாழவேண்டும் என்பதற்காக
அன்பினால் மட்டுமே
கட்டுப்படுத்தவும் முடியும்
காயப்படுத்தவும் முடியும்
நிஜத்தை ரசிக்கும்
மனம் தான்
போலிகளை ரசித்து
கொண்டு இருக்கிறது
(அறியாமையால்)
நம்மள விட்டுட்டு
போனவங்களுக்கு
நாம கொடுக்குற
பதிலடி அவங்க முன்னாடி
சந்தோஷமா வாழ்ந்து
காட்டுறது தான்
நிம்மதி இருந்தால்
நிமிடம் கூட வீணகாது
நிம்மதி இல்லாவிட்டால்
நிமிடம் என்ன வாழ்நாளே
வீணாகி விடும்
📖 பக்கம் 83 / 606
📋 Copied