தோளில் சாய்ந்து
உருகும் கணம்
ஆயிரம் பிரபஞ்சங்களை
மறந்து விடும்
உன் முயற்சியால்
வெற்றி நிச்சயம் என்ற
நம்பிக்கையில் வாழ்
எண்ணங்கள் பிழையானால்
சிறகு அடிக்கும்
பட்டாம் பூச்சியும்
சிலந்தி வலைக்குள்
சிக்கிக்கொள்ளும்
நாள் முடிந்ததும்
வெற்றி இல்லை என்றால்
அனுபவம் மட்டும் தவறாது
ஒருவரின்
அன்பு உங்களை
பெருமை படுத்தினால்
அதன் கரம் பற்றி
முன்னேறுங்கள்
சிறுமை படுத்தினால்
அதை கை கழுவி
விட்டு முன்னேறுங்கள்
வெற்றி அடைய
தற்காலிக தோல்விகள்
தேவைப்படும்
உணர முடியாத சந்தோசத்தை
கொடுப்பதும் உணர முடியாத
வலியை கொடுப்பதும்
உங்கள் மனதிற்கு
பிடித்தவர் மட்டும் தான்
வாழ்க்கை குறுகியது
ஆனால் நல்ல நினைவுகள்
நீளமானவை
நடக்குறது எல்லாமே
நல்லதுக்கு தான்
நடிக்கிற எதையுமே
கண்டுக்காத வரைக்கும்
சுழன்றாடும் உலகத்தில்
நிலையாக நிற்கும்
ஒரே சக்தி
(மன உறுதி)
📖 பக்கம் 82 / 606
📋 Copied