புகழை தேடுபவன்
தற்காலிகமாக வெல்லலாம்
உழைப்பை நேசிப்பவன்
நிரந்தரமாக வெற்றி பெறுவான்
உன்னால் உதிர்க்கப்பட்ட
வார்த்தைகளுக்கு
நீ உண்மையாக
இருக்க போராடினால்
எவ்வளவு
இக்கட்டான நிலையிலும்
அவ்வார்த்தைகளே
உன்னை காப்பாற்றும்
எல்லா கடுமையான நாட்களும்
ஒரு புதிய வழியை காண்பிக்கும்
மனம் உடையும் போது
மௌனமே மருந்தாகும்
உடைந்த சிதிலமடைந்த
வீடுகளுக்கு
பின் பெரிய பெரிய
கதைகள் மறைந்திருக்கும்
அது போலதான் மனிதனும்
போதும் என்ற முடிவு
புதிய தொடக்கத்துக்கான
முன்னுரை
பார்க்கும்
உறவுகள் எல்லாமே
உன் சொந்தம் இல்லை
பழகி பார்
பாதி வேஷம் தான்
எத்தனை
தூரமானால் என்ன
வார்த்தைகள் மொழிகள்
தேவையில்லை
சில உறவுகளுக்கு
உழைப்பின் சுவை
வெற்றியின் இனிப்பை முந்தும்
வாழ்க்கை குறுகியது
ஆனால் நினைவுகள் நீளமானவை
📖 பக்கம் 74 / 606
📋 Copied