வாழ்க்கை எப்போதும் நம்மை சோதிக்கும் ஆனால் நம்மை வெல்லாது
சில நேரம் மௌனம் பேசும் அது வாழ்க்கையின் உண்மை குரல்
தோல்வி வந்தால் அது நிறுத்தம் அல்ல மறுபடியும் தொடங்கும் சிக்னல்
கண்ணீர் என்பது இதயத்தின் ரகசிய மொழி
ஒரு விஷயத்தை பற்றி நாம் யோசிக்க வேண்டுமென்றால் அதற்கு மதிப்பு இருக்க வேண்டும் தகுதி இல்லாத ஒன்றை பற்றி யோசித்து நம் நிம்மதியை இழந்து விடக்கூடாது
ஓர் இலக்கை அடைய வேண்டும் என்றால் அதில் வரும் வலி மற்றும் வேதனைகளை அனுபவித்து தான் கடக்கவேண்டும் அப்போதுதான் நம் தன்னம்பிக்கையின் பலம் மற்றும் பலவீனத்தை உணரமுடியும்
கணத்தில் உதித்த புன்னகையால் மனத்தின் கனம் குறைந்தது (மழலைகள்)
அடைந்த இடத்திலே நிற்காதே முன்னேறு
உரிமை உள்ள இடத்தில் கோபத்தை காட்டிணாலும் புரிந்துகொள்வார்கள் உரிமை இல்லாத இடத்தில் புன்னகைத்தாலும் புறக்கணித்து விடுவார்கள்
நம் தேவைகள் கிடைக்க கொஞ்சம் நம்பிக்கையும் சிறு தேடலும் இருந்து விட்டால் போதும் அது எளிதில் நம்மை சேர்ந்து விடும்