முகத்திற்கு முகமூடி
போடுபவர்களை விட
அகத்திற்கு முகமூடி
போடுபவர்கள் அதிகம்
பலமில்லாத போது
பகை கொள்ளக்கூடாது
பலம் வந்த பின்
திமிர் கொள்ளக்கூடாது
நிரந்தரமானது
என்பது எல்லாம்
தற்காலிகமானதே
ஒரு நாள்
அவை அனைத்துமே
மறைந்து விடும்
தன்னம்பிக்கை
உள்ள இடத்தில்
தயக்கம் குறையும்
உன் மேல் சத்தியம்
செய்யும் ஒருவரையும்
ஒருபோதும் நம்பாதே
தீர விசாரிக்கும் வரை
சிறு முயற்சி கூட
நிலைத்த நம்பிக்கையுடன் வந்தால்
சிகரத்தை தொட்டுவிடும்
தனிமையில் தீர்மானிக்கப்படும்
கனவுகள்தான்
வெற்றிக்கு வேராகின்றன
வாழ்க்கை என்பது
ஒரு புத்தகம் போல
ஒவ்வொரு பக்கத்தையும்
படித்தே முன்னேற வேண்டும்
யாருக்கு எப்போது
என்ன நடக்கும்
என்றே தெரியாது
இருக்கும் வரை
வன்மம் இல்லாமல்
அன்பை மட்டுமே
விதைப்போம்
தன்னை வெல்லாதவன்
உலகை வெல்ல முடியாது
📖 பக்கம் 57 / 606
📋 Copied