ஆயிரம் உறவுகளால்
தர முடியாத பலத்தை
ஒரு அவமானம் தரும்
அழகான
நொடிகளுக்குள்ளயே
பயணிக்கிறது
சில உறவுகள்
நினைவலைகளாய்
வெற்றியும் தோல்வியும்
இரண்டு படிக்கட்டுகளே
ஒன்றில் உன்னை
உணர்ந்து கொள்வாய்
மற்றொன்றில் உன்னை
திருத்திக்கொள்வாய்
தொலை தூரத்தில்
இருந்தாலும்
நமது நினைவுகளை
தொலைக்காமல் இருப்பவர்களே
உண்மையான உறவுகள்
இன்று நாம்
பேசநினைக்கும் கருத்துக்களை
சிலர் உனக்கு
என்ன தெரியும் என்று
நம்மை தடுத்துவிடுவார்கள்
அதற்கு வருந்தாதீர்கள்
காலத்தின் வட்டத்தை
நம்புங்கள்
அந்நாள்
நம் கருத்துக்கள் தான்
கை ஓங்கி நிற்கும்
ஒரு பிரச்சனை என்றால்
சூழ்நிலை மட்டும் நினைக்காதீர்கள்
சில நாய் வேஷமிட்ட நரிகளின்
சூழ்ச்சியாக கூட இருக்கலாம்
என்பதை மறக்காதீர்கள்
நாளைய சூரியனைக் காண
இன்றைய இருளை
கடக்க வேண்டும்
போராடி வாழ்வதற்கு
வாழ்க்கை ஒன்றும்
போர்க்களமல்ல
அது பூவனம் போல
ரசித்துக் கொண்டே
வாழ்வோம்
சில நேரங்களில்
நம்மை யாரும் புரிந்துகொள்ளாதது
அதிகமான துன்பத்தை கொடுக்கும்
ஆனால் அந்த துன்பமே
நம்மை நம்பிக்கையுடன்
முன்னேற வைக்கும்
அதிகாரத்தால் விலைக்குவாங்க
முடியாததில்
முதன்மையானது அன்பு
📖 பக்கம் 45 / 606
📋 Copied